மடல் வழியாய் ஒரு சந்திப்பு

இனியவர்களே, வணக்கம்!

திருப்பூர் வள்ளலார்நகர் தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 17ஆம் ஆண்டில் காலடி வைத்துள்ளது. குறை, நிறைகளை உள்வாங்கிக் கொண்டு, வெற்றி தோல்விகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தாய்மொழிக் கல்வியை முதன்மைப்படுத்தி 400 குழந்தைகளோடு மிகச்சிறப்பாக செயல்படுகிறது என்கிற செய்தி தாங்கள் அறிந்ததே. இந்த வளர்ச்சிப் பாதையில் தங்கள் காலடிச் சுவடுகளைப் பதிய வைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம் பள்ளியை ஆய்வு செய்துதமிழைக் கண்டு கொள்ளாத தமிழக அரசுஎன கல்கி வாரஇதழ் சிறப்புக்கட்டுரை எழுதியது. மக்கள் மீது நம்பிக்கை வைத்து முன் நடந்தோம். “மெல்லத் தமிழ் இனி வாழும்என தினமணி நாளேடு (தினமணி ஆசிரியர் சம்பந்தம் அவர்களே பள்ளியை நேரடியாக ஆய்வு செய்து) நம் பள்ளியைப் பற்றி சிறப்புக் கட்டுரை எழுதியது. 14700 சதுரஅடி இடம் வாங்கினோம். “குடிசைத்தமிழ்என தினத்தந்தி சிறப்புக்கட்டுரை எழுதியது. 6000 சதுரஅடி கட்டடம் கட்டினோம். “தவிக்கிறது தாய்த்தமிழ்ப் பள்ளிஎன தினமலர் சிறப்புக் கட்டுரை வெளியிட்டது. கணினி வசதிகளை உருவாக்கினோம். “தமிழ்நாட்டில் தாய்த்தமிழ்ப் பள்ளிகள்சிறப்புக் கட்டுரை வெளியிட்டது திண்ணை.காம். மூடுந்து வாங்கினோம். “சாதித்தது தாய்த்தமிழ்ப் பள்ளிஎனத் திருப்பூர் வாய்ஸ், தமிழக நியூஸ் சிறப்புக் கட்டுரை வெளியிட்டது. அடுத்த கட்ட விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

தமிழ்வழிக் கல்வியை இழிவாகப் பார்க்கும் மனநிலையை உடைத்தெறிந்து தமிழால் முடியும், தமிழனால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தெடுத்து தலைநிமிர்ந்து நிற்கும் திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியை மக்கள் தொலைக்காட்சி சிறந்த பள்ளியாகத் தேர்ந்தெடுத்துமக்கள் விருது 2008” வழங்கி சிறப்பித்துள்ளது.

நமது பள்ளியை மேலும் விரிவாக்கம் செய்ய இடமும், கட்டடமும் கற்பித்தல் கருவிகளும் தேவைப்படுகிறது. குழந்தைகளிடம் வாங்கும் மிகக்குறைந்த கட்டணம் ஆசிரியர், காவலர், தாயம்மா ஊதியத்திற்கும், நிர்வாகச் செலவிற்குமே போதாத நிலையில் இத்தேவையை நன்கொடை வழியாகவே திரட்ட வேண்டி உள்ளது. இப்பணி வெற்றி பெற தங்களால் இயன்ற உதவியைக் கொடுத்துதவ அன்புடன் வேண்டுகிறோம்.

கற்கை நன்றே, கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

இது கனியன் பூங்குன்றனாரின் வரிகள்.

நாங்கள் கேட்பதோ கற்பிக்க பிச்சை.

1 கருத்து:

  1. எனது சொந்த ஊர் திருப்பூர்[காந்திநகர்]. பெங்களூருவில் மென்பொருள் பொறியாளர் தொழில். தேவியர் இல்லம் வாயிலாக இப்பக்கத்தை பார்க்க நேர்ந்தது. மிக்க மகிழ்ச்சி சார்.
    உங்களை எப்படி தொடர்புகொள்வது? அடுத்த வாரம் வார விடுமுறைக்கு திருப்பூருக்கு வரக்கூடும். முடிந்தவரை உங்களை நேரில் காண முயல்கிறேன்.

    நன்றி,
    அருண் குமார்.

    பதிலளிநீக்கு